Thursday, November 30, 2006

நான்கு சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..

ஒரே மணி, அதே ஒலி தினம் பாடுது
பல ஸ்வரம், ஒரேவித கதை பேசுதே!
அதே மனம், புது சுவைக்காக ஏங்குது
தனிமையெனும் விழம் கூட தலைக்கு ஏறுதே!
பேசும் வார்த்தை மரபு மீறி சுமையானது
மௌன மொழியும் இந்நாட்களில் கசப்பானதே!
நில்லாமல் சுற்றும் எந்தன் பூமி சுழல மறுக்குது
நேற்றும் இன்றும் நாளை போல குழப்பமானதே!
ஜன்னலில் வரும் முகம் நிழலானது
பாசம் நேசம் தோற்றம் மாறி அஞ்ஞானமனதே!
இவை பிழையான‌ கனவெனில் விழிக்கலாம்.
விழித்திருக்கையிலேயே வாழ்க்கை கனவெனத் தெளிந்தால்,
விழித்தென்ன? வாழ்ந்தென்ன?

Friday, November 17, 2006

எது என்று சொல்ல‌?

நீ தனிமை என்றால், நான் துணையா தூர‌த்திலா?
நீ துணை தான் என்றால், நான் பேசவா யோசிக்கவா?
நீ திரும்பி நின்றால், நான் நிற்கவா போய்விடவா?
நீ போகிறாய் என்றால், நான் அழைக்கவா அழுதிடவா?
நீ காதல் என்றால், நான் சரியா தவறா?

(தில்)

Saturday, November 11, 2006

Post it...

Found written on the rear of a giant truck

If you can't see my mirror,
I cannot see you...

somehow suits life too...