Thursday, November 30, 2006

நான்கு சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..

ஒரே மணி, அதே ஒலி தினம் பாடுது
பல ஸ்வரம், ஒரேவித கதை பேசுதே!
அதே மனம், புது சுவைக்காக ஏங்குது
தனிமையெனும் விழம் கூட தலைக்கு ஏறுதே!
பேசும் வார்த்தை மரபு மீறி சுமையானது
மௌன மொழியும் இந்நாட்களில் கசப்பானதே!
நில்லாமல் சுற்றும் எந்தன் பூமி சுழல மறுக்குது
நேற்றும் இன்றும் நாளை போல குழப்பமானதே!
ஜன்னலில் வரும் முகம் நிழலானது
பாசம் நேசம் தோற்றம் மாறி அஞ்ஞானமனதே!
இவை பிழையான‌ கனவெனில் விழிக்கலாம்.
விழித்திருக்கையிலேயே வாழ்க்கை கனவெனத் தெளிந்தால்,
விழித்தென்ன? வாழ்ந்தென்ன?

No comments: