Wednesday, October 12, 2011

ஒரு க‌ன‌வு போதுமே!

நீ -

மழையிருள் மூடிய‌ முன்மாலை பொழுது

மேல்ப‌டாது சிந்தும் பூத்தூவ‌ல் சார‌ல்

தீராம‌ல்ப‌ர‌வும் காபியின் இத‌மான‌ சுக‌ந்த‌ம்

த‌ய‌க்க‌ங்க‌ள் தாண்டி முக‌ம்ம‌ட்டும்குளிர காற்று

மெதுவாய் க‌சியும் அழ‌கான‌ இத‌ய‌ம் இட‌ம்மாரிய‌தே‍‍‍

வேக‌ம்தெரியாது செல்லும் நெடுநேர‌ ப‌ய‌ண‌ம்

பிழைக‌லாய் காட்சிப்பின்னோடும் ம‌ர‌ம்மூடிய‌ பாதை

அங்கு

சித‌ரிச் செல்லும் துண்டு காகித‌ம் - போல்

தெரிந்து ம‌றையும் ஒரு நின‌வு.

1 comment:

Anonymous said...

Very expressive, nalla pulamai
Good choice of words and nicely put
த‌ய‌க்க‌ங்க‌ள் தாண்டி முக‌ம்ம‌ட்டும்குளிர காற்று is awesome lyric