Monday, September 28, 2015

whatchamacallit?

அடர்ந்த காடு. தனிமையில்,
துணைதேடி ஒரு பூமரம்.
பார்க்க வந்த ராஜன் வியந்தான்.
இது கலை! இது  காவியம்!
பலவாறு புகழ்ந்தான் .
மேலும் அழகாய் ஆக்க வியைந்தான்.
இலைகளின் சரசரப்பு இரைச்சலை வெறுத்தான்.
கிளைகள் ஆடம்பரம் எனக் களைந்தான்.
குளிர் நிழல் பொழுதுக்கும் தேவையில்லையே!
பொருளின்றி காயும் தண்டு  வீணென்று வெட்டினான்
“இதனால் நான் நானாக இல்லாமலே போவேனே!
இவ்வாறு புண்ணாக்கி இத்-தையல் தேவையா”?
கேட்ட மரத்திடம்: "ஒப்பற்று இருப்பாய்
நான் கலைஞன்,  நம்பு என வருத்தினான் !"
உயர்ந்து காற்றில் ஆடிய மரம்,
அமர்ந்து கதை பேசும் மேடை ஆனது.
கற்பனையா , மிகும்  காவியமா  என்று அறிஞர்கள்  விவாதிக்க
பேதமையே,வெறும்  சோதனையே  என்று  கிறுக்கர்கள்  கெஞ்சினார்கள்.
தன் விதி  நிலை  வெறுத்த  மரத்திடம்
ஒரு  பூச்செண்டு கொடுத்து;
"நான் என்ன செய்தேன், இன்னும்
உன்  வேர்  உன்னிடம் தானே  கேட்டான்"!

எதனால் ஏமாற்றம், எதற்குப்  பழி என்றான்!

No comments: