இராப்பொழுது வானின் வில்லாக,
மலரைக் காக்கும் தென்றலாக,
கண்ணீருக்குப்பின் வரும் சிறுபுன்னகையாக,
உற்சாகம் கொடுக்கும் அலை முத்தமாக,
சுவாசமாய் நிறையும் ஆசைக்காற்றாக,
நான் முற்பிறப்பில் பெற்ற பலனாக,
வாய்த்திருக்கும் என்னவனே.
என் நண்பனே, என் கணவனே, என காதலனே!!!
வேர் நுனியிலிருந்து இலைகளுக்கு பரவும்
இதம் போலான உன் கனிவினால்
நான் இருப்பேன் - சலனமில்லாது.
நானாக, நீயாக, அனைத்துமாக!
No comments:
Post a Comment