Wednesday, December 13, 2006

அழகு

மழையின் துளி ஒன்று மயிலிறகில் விழுந்தால்,
தோகைமயில் ஆடும் காட்சிகளும் கண்டேன்.
மழையின் துளி ஒன்று பாறைகளில் விழுந்தால்
மௌனமே மிஞ்சும் காட்சிகளும் கண்டேன்.
இர‌ண்டு பொருள் உண்டு, எந்த‌ பொருள் பாட‌?
பாலைவனம் எங்கும் பால் நில‌வு தேன் சிந்தி யார் பார்த்திட‌?

சின்ன‌ சின்ன‌க் கிண்ண‌ம், ஊற்றி வைத்த‌ வ‌ண்ண‌ம்,
தூறிகையில் சேர்ந்தால், ஓவிய‌ங்க‌ளாகும்.
ஓவிய‌னின் வ‌ண்ண‌ம், ஊற்றி வைத்த கிண்ண‌ம்,
பேதைக் கையில் சேர்ந்தால், என்ன நிலை ஆகும்?
இர‌ண்டு நிலை உண்டு, எந்த‌ நிலை பாட?
ரசிகன் இல்லை என்றால், தாமரை பூ பூத்து யார் பார்த்திட?

பாடவா? பாடவா? அலைகளைப் பாடவா?
பாடவா? பாடவா? கரைகளைப் பாடவா?
பாடல்கள் கோடி, என்ன பாடும் வானம்‍பாடி?
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட,
அலையடிக்கும் நீரில் அல்லி என்ன பாட?

(ஜான்)

No comments: