Monday, August 1, 2005

தனிமையின் கொடுமை..,

மனதில் இருக்கும் சுமை,
விண்ணுலகம் வரை எட்டியது எப்படியோ? என்னைப்போல்
வானமும் கரு மேக‌ம் சூழ்ந்து இருக்கிறதே!!

பெண்ணின் கண்ணீரா, மழைத்துளியா..
பவித்ரமானது எது என்று போட்டியோ?
விடை அறிந்த பூமியும் மணக்கின்றதே!!

நீர்த்துளிகளும் மணற்துகள்களும்
இணையும் பந்தத்தை, வானம்
மின்னலும் இடியுமாய் வாழ்த்துகின்றதே!!

கண்ணீருக்கும்
அவளின் மடி மீது மோகமோ?
தன் அகம் விட்டு புது மனைப் போய் விழுகின்றதே!!

கொள்ளைக் கொள்ளும் காற்றுக்கு
பிறிவின் துயரம் என்ன தெறியும்?
உன் வாசம் சுமந்து வந்து தீண்டுகின்றதே!!

என்மேல் விழுந்த மழைத் துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்:
மழையிடம் வினவும் அவனுக்கு
நான் தான் உனக்கு இங்கே இருக்கிறேனே என்ற பொழுதும்
விளங்காமல் ஏன் போனதோ?

No comments: